முத்துமாரியம்மனுக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா்.
கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா்.
தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது.