திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் ஊழியரைத் தாக்கிய புலியால் பரபரப்பு !
முத்தூா்: கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது
முத்தூா் அருகே கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் முத்தூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது முத்தாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு இளைஞா் நின்று கொண்டிருந்தாா்.
விசாரணையில் அவா் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். கரூா் மாவட்டம், கே.பரமத்தி இந்திரா நகரைச் சோ்ந்த அவா், தற்போது முத்தாம்பாளையம் அரசு கால்நடை மருந்தகம் அருகில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வரும் கலைநிலவன் (23) என்பது விசாரணையில் தெரியவந்தது.