செய்திகள் :

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `போலீஸா, இயக்கமா...’ - கீழ்குவாகம் ராமசாமி யார் பக்கம்?|அத்தியாயம் 3

post image
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...

திடீர் திடீரென முந்திரிச் செடிப் புதர்களிலிருந்து வெளிப்பட்ட தோழர்கள் ' பைக்'கில் வந்த ராமசாமிக்கு ' சல்யூட் ' அடித்து வழி விட்டனர். பயிற்சி முகாம் நடந்து கொண்டிருப்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.

அரசியல்வாதி நிலக்கிழார்கள் போலீஸார்... மூவரின் உருவப் பொம்மைகளைச் சுமந்த சட்டிகள் தொலைவில் இருக்க... அவற்றை நோக்கிச் சுடுவதற்குத் தயாராக, இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் குறிபார்த்து நின்றிருந்தனர்.

நாட்டு வெடிகுண்டு - பைப் வெடிகுண்டு... இப்படிப் பல ரகங்களில் வெடிகுண்டு தயாரிப்புகளைச் சொல்லிக் கொடுக்கும் பிரிவினர், துரிதமாக இயங்கிக் கொண்டிருந்தனர். செம்மண்ணை வாரியடித்து வெடித்துச் சிதறின வெடிகுண்டுகள்.

கொஞ்சம் இடைவெளிவிட்டு இன்னொரு இடத்தில் வகுப்புகள் சின்னச் சின்ன ' டெண்ட்'களில் நடந்து கொண்டிருந்தன. மாவோ, லெனின் ஆகிய தலைவர்களின் சித்தாந்தங்கள் பற்றிய பிரசங்கங்கள். இங்கேயும் ஏராளமான இளைஞர்கள்! இதையெல்லாம் ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி வந்த ராமசாமி, தனது பைக்கை ஒரு முந்திரி மரத்தோரம் நிறுத்தினார்.

அருகிலிருத்த தோப்புக் கொட்டகைக்குள் நுழைந்ததும் ' வணக்கம் தோழரே ' என்று எல்லோருக்கும் கரம் கூப்பினார் ராமசாமி. ஆனால், எல்லோரது முகமும் இறுக்கமாக இருந்தது. யாரும் பதிலுக்குப் பேசக்கூட இல்லை. மையமாக விரித்திருந்த பாபில் சகஜமாகப் போய் உட்கார்ந்து கொண்டு ராமசாமியே திரும்பவும் கேட்டார் :

" என்ன தோழர் பிரச்னை...? எதுக்கு வரச் சொன்னீங்க?.. " பக்கத்திலிருந்த தோழர், முகத்தில் சலனமில்லாமல் பதில் சொன்னார் :

" நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களாமே...? அதுதான் இப்போ பிரச்னை... " ராமசாமி திகைத்துப் போனார். ஆனால், பதில் தெளிவாக வந்தது. நான்கு வருஷம் இயக்கத்துக்காக உழைச்சேன். சிறை, சித்ரவதை, தலைமறைவு வாழ்க்கை, பசி, பட்டினி...

இவ்வளவிலும் போலீஸ் துரத்தலுக்குப் பயந்து மரண ஓட்டம்னு எல்லாக் கொடுமைகளையும் அனுபவிச்சுட்டேன். இப்போ, எனக்கு குடும்பம் கஷ்டப்படறது தெரியுது. அதனால, குடும்பத்துக்காக உழைக் கணும்னு ஆசைப்படறேன். இதுல என்ன தப்பு இருக்குனு சொல்லுங்க தோழர்...? "

" எல்லாமே தப்புதான். நம்ம கட்சியும் இயக்கமும் என்ன கொள்கையோட இருக்குனு தெரியுமுல்ல... நாட்டுல இருக்கிற எல்லா ஏழைக் குடும்பங்களும் நம்ம குடும்பம்தான்ங்கிற நினைப்பு வரணும். உங்களுக்கு ஏன் இந்தத் தனியுடைமைச் சிந்தனை... குடும்பம், தனிச் சொத்துங்கற எண்ணங்கள் தான் கம்யூனிஸ்ட்களை அழிக்குது.

லட்சியப் பாதையில இருக்கற நமக்கு எதுக்குக் கல்யாணம், குடும்பமெல்லாம்... தமிழரசன் தியாகம் செய்தார். அவரோட எத்தனையோ பேர் உயிர்த்தியாகம் செஞ்சாங்க.... குடும்பங்களைவிட்டு நாம் எத்தனை பேர் தலைமறைவு வாழ்க்கை வாழறோம்... இதெல்லாம் எதுக்காக.... தமிழரசன் நமக்குக் காட்டின லட்சியப் பாதையில் போய், இந்திய ஏகாதிபத்தியத்துகிட்டேயிருந்து தமிழ்நாட்டுக்கு விடுதலை வாங்கித் தரத்தானே...? " - ஆக்ரோஷமாக ராமசாமியைப் பார்த்து முழக்கமிட்டார் ஒரு தோழர்.

அவர்களுக்குக் கொடுப்பதற்காக கையோடு கொண்டுவந்த கல்யாணப் பத்திரிகைகளை இறுக்கிப் பிடித்தன, ராமசாமியின் விரல்கள்.

" அதெல்லாம் எனக்குப் புரியலைங்க... என் குடும்பம் நல்லாயிருக்கணும்னு நான் உழைக்கப் போறேன். இதுமாதிரி ஒவ்வொருத்தரும் அவங்கவங்க குடும்பம் நல்லாயிருக்கணு உழைச்சா, எல்லாருமே நல்லாயிருப்பாங்க. அதான் ஜெயில்ல இருக்கும் போது எனக்குப் புரிஞ்சுது. அதனால நாடும் நல்லாயிருக்கும். நான் அதிகம் படிச்சதில்லை. ஆனா, இப்படி நினைச்சாதான் நாடு நிஜமாவே நல்லாயிருக்கும்னு எனக்குத் தோணுது... ' '

" ஜெயில்ல இருந்தப்ப உங்களை போலீஸ் ரொம்பவே குழப்பிவிட்டிருக்கு தோழர். அதனாலதான், இப்படி முதலாளித்துவ சிந்தனையோட பேசறீங்க. எத்தனை கூட்டங்கள்ல பேசியிருக்கோம்... முதலாளித்துவம், காதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் து மூணையும் ஒழிக்கத்தான நாம உருவெடுத்திருக்கோம்னு! இப்போ நீங்க பேசறதை வெச்சுப் பார்த்தா, நாங்க நீங்களும் ஒருத்தர் ஒழிக்கவேண்டிய எதிரிகள்ல நீங்களும் ஒருத்தா ஆயிடறீங்க... போங்க, போய் நல்லா யோசிங்க... ஆனா, போலீஸோட கையாளா மாறி எங்களைக் காட்டிக் கொடுக்கணும்னு மட்டும் நினைக்காதீங்க... அப்புறம், அதோட விளைவுகள் விபரீதமாயிடும்... ' '

புறங்கையை அசைத்து ராமசாமிக்கு வெறுப்பு பொங்க விடை கொடுத்தார் சீனியர் தோழர். குழப்பமான மனநிலையில் ராமசாமி ' பைக்'கை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பினார். இந்தக் குழப்பத்தில் அவர், தன்னை கூர்ந்து கண்காணிப்பதைக்கூடக் கவனிக்கவில்லை!

என்னதான் ராமசாமி உண்மையிலேயே திருந்திவிட்டாலும் கூட, போலீஸ் போலீஸ் அவரை இன்னும் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தது. இதனால் ' க்யூ ' பிராஞ்ச் அதிகாரி ஒருவர், ராமசாமியைக் கண்காணிப்பதற்கு என்றே நியமிக்கப்பட்டிருந்தார். ராமசாமி தீவிரவாதத் தோழர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பியதைப் புரிந்து கொண்டார். மேலிடத்துக்கு ரிப்போர்ட் கொடுத்தார்.

' இன்னும் ராமசாமி திருந்த வில்லை ' என்று முடிவு செய்தது போலீஸ். கல்யாணமெல்லாம் முடிந்து சுற்றங்கள் கலைந்து கொண்டிருந்தன. ராமசாமியும் புதுமணப் பெண் ராணியும் கலகலவென சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது, பந்தலின் வாசலில் வந்து ' கிரீச்'சிட்டு நின்றது, அந்த போலீஸ் ஜீப். சிறையில் ராமசாமிக்கு அட்வைஸ் செய்த அதே ' க்யூ ' பிராஞ்ச் அதிகாரி! ஜீப்பிலிருந்து இறங்கி பெல்ட்டை அட்ஜஸ்ட் கொண்டு மிடுக்காக மணமேடையை நோக்கி வந்தார்.

தன்னை வாழ்த்த அந்த அதிகாரி நேரடியாகவே வந்து விட்டதில் ராமசாமிக்கு சந்தோஷம். மனமெல்லாம் மகிழ்ச்சிக் கொப்புளிக்க அவரை ராமசாமி வரவேற்க, ராமசாமியின் முகத்துக்கு எதிரே தன் முகத்தை நெருக்கத்தில் வைத்துக் சொண்டு, கிசுகிசுத்த குரலில் சொன்னார் அந்த அதிகாரி : ' இன்னமும் நீ திருந்தலைனு எனக்குத் தகவல் வந்திருக்கு. இனிமேலாவது திருந்தலைனா, ஒருநாள் கூட நிம்மதியா குடும்பம் நடத்த விடமாட்டேன். "

கடுமையான குரலில் இதைச் சொன்ன அடுத்த நொடியே, முகத்தில் புன்னகையை வரவழைத்து, ராமசாமியிடம் கைகுலுக்கிவிட்டு, ராணிக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு ' சரசரவென கிளம்பிவிட்டார் ' க்யூ ' பிராஞ்ச் அதிகாரி. ராமசாமிக்குப் பேயறைந்த மாதிரி ஆயிற்று!

அடுத்து வந்த நாட்களில், சில இரவுகள் ராமசாமிக்கு அவஸ்தையாக கழிந்தன. நள்ளிரவுக்கும் மேல் திடீரென போலீஸ் வேன் வந்து நிற்கும். ' தபதப்வென சில கான்ஸ்டபிள்கள் ஓடிவந்து, வீட்டைச் சுற்றி நிற்பார்கள். ஒரு ஏட்டோ, சப் - இன்ஸ்பெக்டரோ வாசலில் வந்து நின்று, லத்தி முனையால் கதவைத் தட்டி ராமசாமியை எழுப்புவார்.

தூக்கம் தேக்கிய கண்களோடு வந்து கதவைத் திறந்தால், “ வீட்டுல தான் இருக்கியா, எங்கேயாவது குண்டு வைக்கப் போயிட்டியான்னு ஐயா பார்த்துட்டு வரச் சொன்னாரு ' ' என்பார். சில நிமிடங்கள் பேசிய படியே வீட்டையும் வீட்டைச் சுற்றிய இடங்களையும் நோட்டமிட்டு விட்டு நகர்வார். சில இரவுகளில் கதவு மிக சன்னமாகத் தட்டப்படும். திறந்து பார்த்தால் கரிய இருளில் மங்கலாக சில உருவங்கள் அசையும்.

" நாங்கதான் தோழர்! " என்று கிசுகிசுப்பாகக் குரல் வரும். “ நீங்க திருந்தி வாழணும்னு நினைச்சாலும் போலீஸ் விடாது. பழையபடி எங்களோட வந்துடுங்க. உங்க மனைவியை உங்களோட குடும்பமும், சொந்தங்களும் பார்த்துக்காமலா போயிடும்? " என்பார்கள். சில சமயம் பரிவோடு இந்த அழைப்பு வரும். பல சமயம் கடுமையோடு!

இரண்டுவிதமான அழைப்புகளும் ராமசாமியை மாற்றி மாற்றி குழப்பிக் கொண்டிருந்தன. செய்யாத பாவம் ஒன்று சீக்கிரமே தன் மீது இடியாக இறங்கப்போவது தெரியாமல் யோசித்துக்கொண்டே இருந்தார் ராமசாமி.

மேலும் சலசலக்கும்....

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `பஞ்சாயத்து... கொள்ளை... கொலை’ |அத்தியாயம் 6 & 7

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `உங்களுக்கே தெரியாம இயக்கத்துல எவ்வளவோ நடக்குது!’ |அத்தியாயம் 5

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `புத்தூர் போலீஸ் ஸ்டேஷன் சம்பவம்’ |அத்தியாயம் 4

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : கீழ்குவாகம் ராமசாமி... விதி சொடக்குப் போட்டு அழைத்தது | அத்தியாயம் 2

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `தமிழ்நாடு விடுதலைப்படை... விடை தேடும் பயணம்’ | பாகம் 1

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க