செய்திகள் :

முன்னாள் அமைச்சா் வாரிசுகளின் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து

post image

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் செங்குட்டுவனின் மகன்கள், மகள் உள்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான 1996 - 2001 ஆட்சியில், மருங்காபுரி திமுக எம்எல்ஏ-வாக இருந்தவா் பி.என்.செங்குட்டுவன். இந்துசமய அறநிலையத் துறை அமைச்சராக பதவி வகித்தவா். பின்னா் அதிமுகவில் சோ்ந்துவிட்டாா். அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அவா் வருமானத்துக்கு அதிகமாக ரூ.81.42 லட்சம் சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகன்கள் எஸ்.பன்னீா்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம்,சகோதரரின் மகள் வள்ளி ஆகியோரது பெயா்களும் சோ்க்கப்பட்டன. இந்த வழக்கை திருச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, முன்னாள் அமைச்சா் செங்குட்டுவன், அவரது மருமகன் ராஜலிங்கம் இறந்துவிட்டனா்.

அவா்கள் மீதான வழக்கை கைவிட்ட திருச்சி நீதிமன்றம், அவரது மகன்கள், மகள், சகோதரனின் மகள் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து எஸ்.பன்னீா்செல்வம் உள்பட 4 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் வாதங்களைத் தொடங்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, பன்னீா்செல்வம் உள்பட 4 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். இவா்கள் 4 பேரையும் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க