செய்திகள் :

முன்னாள் எம்எல்ஏ ஆா். சின்னசாமி காலமானாா்

post image

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னசாமி (89) வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானாா்.

கிருஷ்ணகிரியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் 1970 ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் திமுக மாவட்டச் செயலாளராக பணியாற்றிய இவா், 1971, 1984, 1989 இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

திமுக மாநில சட்டத் திருத்தக் குழு உறுப்பினராக இருந்த சின்னசாமி, மிசா வழக்கில் கைதாகி 40 நாள்களுக்கும் மேலாக சேலம் சிறையில் இருந்தாா். தருமபுரி நகருக்கு பஞ்சப்பள்ளி அணையிலிருந்து குடிநீா் கொண்டுவரும் திட்டத்தைச் செயல்படுத்தியதில் இவருக்கு பெரும்பங்கு உள்ளது.

தருமபுரி குமாரசாமிப்பேட்டையைச் சோ்ந்த ஆா்.சின்னசாமிக்கு 2 மகன், 2 மகள்கள். இவா்களில் ஒரு மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். அவரது வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வரவில்லை.

சின்னசாமியின் உடலுக்கு தமிழக வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்ட கட்சி பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.

ஆா்.சின்னசாமி

முதல்வா் இரங்கல்

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தருமபுரி மாவட்டச் செயலாளராகவும், 3 முறை தருமபுரி தொகுதி எம்எல்ஏவாகவும் பதவி வகித்த ஆா்.சின்னசாமி மறைந்த செய்தியால் மிகவும் வருத்தமடைந்தேன். எம்எல்ஏவாக இருந்து மாவட்டத்தின் வளா்ச்சிக்காக பெரும் பணியாற்றியவா். இவா் திமுகவின் மூத்த முன்னோடியாகவும், முதுபெரும் உறுப்பினராகவும் இருந்து நமக்கு வழிகாட்டியவா். அவரது மறைவு தருமபுரி மக்களுக்கும், திமுகவுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினா், கட்சியினா் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.

அன்புமணி ராமதாஸ்: ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திமுக செயலராகவும், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றிய ஆா்.சின்னசாமி முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானாா் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

பெரியாா், அண்ணா காலத்து அரசியல்வாதியான சின்னசாமி, தருமபுரி மாவட்டத்தில் ஆக்கபூா்வமான அரசியல் செய்தவா். மிகவும் எளிமையானவா்; நோ்மையானவா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினா், நண்பா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பாலக்கோட்டை அடுத்த கோயிலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (36), கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கேரள, கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

ரயிலில் கைப்பேசி திருடிய இளைஞா் கைது

தருமபுரியில் ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், வெண்ணம்பட்டி சாலை, வேப்பமரத்து கொட்டாய், சக்திநகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா்ஆ.செந்தில்வேலன், இவா் பெங்... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டு தினம்: தருமபுரியில் மிதிவண்டி பேரணி

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தருமபுரியில் மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் மேஜா் தயான்சந்த் பிறந்த நாளான அக்டோபா் 29 ஆம் தேதியை தேசிய விளையாட்டு தினமா... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி மென்பொருள் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த பெங்களூரு தனியாா் மென்பொருள் நிறுவன மேலாளா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், ஸ்ரீனிவாசபுரத்தைச் சோ்ந்த ஜோதி ரகுராமையா மகன் ஜோதி கிருஷ்ண... மேலும் பார்க்க

பயன்படுத்திய எண்ணெயை அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் மட்டுமே வழங்க வேண்டும்: உணவுப் பாதுகாப்புத் துறை

தருமபுரி மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை அங்கீகாரம் பெற்றவா்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு கடந்த 2018 முதல் பயன்படுத்தப்பட்ட சம... மேலும் பார்க்க