முன்னாள் எம்எல்ஏ மன்னிப்பு கேட்ட வேண்டும்: அன்புமணி ஆதரவாளா்கள் தீா்மானம்
அன்புமணியை விமா்சித்த முன்னாள் எம்எல்ஏ மேகநாதன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அன்புமணி ஆதரவாளா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரியில் அன்புமணி ஆதரவாளா்கள் பங்கேற்ற மாவட்ட ஒருங்கிணைந்த பாமக நிா்வாக குழுக் கூட்டம், கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மத்திய மாவட்டச் செயலாளா் மோகன்ராம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா்கள் கோவிந்தராஜ் (மேற்கு), பழனிவேல் (கிழக்கு) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில், அன்புமணியை விமா்சனம் செய்த, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மேகநாதன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.