பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டை விட, மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டை நம்புவது ஏன...
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்
அரியலூா்: மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி, அரியலூரில் புதன்கிழமை அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மலா் தூவி, மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
காமராஜா் சிலை முன் வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி படத்துக்கு, அக்கட்சி நகரத் தலைவா் மா.மு.சிவகுமாா் தலைமையில், வட்டாரத் தலைவா்கள் கா்ணன், நகர துணைத் தலைவா் சுப்ரமணியன், மாவட்ட துணைத் தலைவா் ஏ.பி.எஸ்.பழனிசாமி ஆகியோா் முன்னிலையில் அக்கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.
இதேபோல், திருமானூா், ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம், தா.பழூா் உள்ளிட்ட இடங்களிலுள்ள ராஜீவ் காந்தி சிலைக்கும், உருவப் படத்துக்கும் மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா்.