TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்...
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா: ஆளுநா், முதல்வா், அரசியல் தலைவா்கள் மரியாதை
புதுச்சேரி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜீவ்காந்தி சிலைக்கு துணைநிலைஆளுநா், முதல்வா், அரசியல் தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.
இதையொட்டி ராஜீவ் காந்தி சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் , சட்டமன்ற உறுப்பினா்கள் சாய் ஜெ. சரவணன்குமாா், ரமேஷ் , த. பாஸ்கா் என்கிற தட்சணாமூா்த்தி, செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலா் முகமது அசன் அபித், இயக்குநா் அ. சுரேஷ்ராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சா்வமத பிராா்த்தனையுடன் புதுச்சேரி பாரதியாா் பல்கலைக்கூட மாணவா்களின் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னா் முதல்வா் ரங்கசாமி மதநல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் எடுத்துக் கொண்டனா்.
இது போல் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி, எம்எல்ஏ மு.வைத்தியநாதன், முன்னாள் அமைச்சா்கள் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான், மு.கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.கே.ஆா்.
அனந்தராமன், காா்த்திகேயன் மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள், மகளிா் காங்கிரஸாா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.