செய்திகள் :

முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் காலமானார்!

post image

முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் காலமானார்.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் (79), குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள தனது வீட்டில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி பூஜையின் போது ஆரத்தி காட்டியதில் ஏற்பட்ட தீ விபத்தில் கிரிஜா வியாஸ் பலத்த தீக்காயமடைந்தார். அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடுமையான தீக்காயங்களால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அவரின் சகோதரர் கோபால் சர்மா தெரிவித்தார். அவரது இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை உதய்பூரில் நடைபெறும் என்று சர்மா கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் அனுபவமிக்க தலைவரான கிரிஜா வியாஸ், மாநில மற்றும் மத்திய அரசுகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸின் மாநிலத் தலைவராகவும், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தனது அரசியல் வாழ்க்கை முழுவதும், காங்கிரஸில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ள கிரிஜா வியாஸ், 1991 ஆம் ஆண்டு, உதய்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் மத்திய அமைச்சராக பணியாற்றிய கிரிஜா வியாஸ், ராஜஸ்தானின் சித்தோர்கர் தொகுதியிலிருந்து 15-வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கிரிஜா வியாஸின் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: பயங்கரவாதம் எங்கிருந்தாலும் வேரோடு பறித்து எறியப்படும்! - அமித் ஷா

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க