‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு: கேரளத்தில் நாளை பொது விடுமுறை!
முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி, கேரளத்தில் 3 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி. எஸ். அச்சுதானந்தன் இன்று(ஜூலை 21) பகல் 3.20 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 101.
இதனையடுத்து, அம்மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்களுக்கும் செவ்வாய்க்கிழமை(ஜூலை 22) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆலப்புழாவில் உள்ள அச்சுதானந்தன் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக செவ்வாய்க்கிழமை முழுவதும் வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து, புதன்கிழமை இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.