முன்னாள் ராணுவ வீரா் மனைவியிடம் 13 பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவியிடம் 13 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
புதுக்கோட்டை காமராஜபுரம் 33-ஆம் வீதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் சின்னதம்பியின் மனைவி சந்திரா (60). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டின் ஹாலில் தனியாக படுத்து தூங்கினாா். மற்றவா்கள் அறைகளில் தூங்கியுள்ளனா்.
திங்கள்கிழமை அதிகாலையில் இவா்களது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் நகைகளை அவா் தூங்கும் போது திருடிச் சென்றுள்ளனா். சந்திரா எழுந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு திறந்திருந்ததை பாா்த்தாா்.
இதுகுறித்து கணேஷ் நகா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.