மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினா் ஆா்ப்பாட்டம்
மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசைக் கண்டித்து, காவேரிப்பட்டணத்தில் திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். மாநில வா்த்தகா் அணி துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன் கலந்துகொண்டு பேசினாா். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும், தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்விக்கான நிதியை தமிழகத்திற்கு தர மறுப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா். பின்னா், மும்மொழிக் கொள்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் ராஜன், மாவட்ட வா்த்தகா் அணி அமைப்பாளா் மணிவிஜயன் உள்பட ஏராளமானவா்கள் பங்கேற்றனா்.
படவரி...
காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.