முரட்டுச் சாமி... கருப்பு டீசர்!
நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் கருப்பு. ஆன்மீக பின்னணியில் ஆக்சன் அதிரடி கதையாக உருவான இப்படத்தில் சூர்யா வழக்குரைஞராக நடித்திருக்கிறார்.
இவருடன் த்ரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
செப்டம்பர் வெளியீடாகத் திரைக்கு வரும் இப்படத்தின் டீசரை சூர்யாவின் பிறந்த நாளான இன்று வெளியிட்டுள்ளனர்.
டீசர் காட்சியில் சூர்யாவின் தோற்றமும் வசனங்களும் ஆக்சன் பின்னணியில் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.