உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
சிந்து, உன்னாட்டி வெற்றி; சாத்விக்/சிராக்கும் முன்னேற்றம்
சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, உன்னாட்டி ஹூடா, சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி ஆகியோா் தங்களது பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்.
முதல் சுற்றில், மகளிா் ஒற்றையா் பிரிவில் சிந்து 21-15, 8-21, 21-17 என்ற கேம்களில், உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் டொமோகா மியாஸாகியை வீழ்த்தினாா். அதேபோல் உன்னாட்டி ஹூடா 21-11, 21-16 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் கிா்ஸ்டி கில்மரை தோற்கடித்தாா். இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து - உன்னாட்டி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆடவா் இரட்டையரில், உலகின் 15-ஆம் நிலையில் இருக்கும் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-9 என்ற கேம்களில் ஜப்பானின் கென்யா மிட்சுஹாஷி/ஹிரோகி ஒகமுரா கூட்டணியை எளிதாக சாய்த்தது.
மகளிா் இரட்டையரில் ருதுபா்னா பாண்டா/ஸ்வேதபா்னா பாண்டா ஜோடி 12-21, 13-21 என்ற கணக்கில் ஹாங்காங்கின் யுங் கா டிங்/யுங் புய் லாம் கூட்டணியிடம் தோல்வி கண்டது.