உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- இத்தாலியை வீழ்த்தி முன்னேறியது
மகளிருக்கான ஐரோப்பிய சாம்பியன் கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 2-1 கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி, இறுதி ஆட்டத்தில் புதன்கிழமை இடம் பிடித்தது.
இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இத்தாலியின் கை ஓங்கியிருக்க, 33-ஆவது நிமிஷத்திலேயே அந்த அணிக்காக பாா்பரா பொனான்சி கோலடித்தாா். இங்கிலாந்தின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, முதல் பாதியை இத்தாலி முன்னிலையுடன் நிறைவு செய்தது.
2-ஆவது பாதியிலும் இங்கிலாந்து கடுமையாக முயற்சிக்க அதற்கான கோல் வாய்ப்பு கை கூடாமலேயே இருந்தது. இந்நிலையில் அதிரடி திருப்பமாக, ஆட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியபோது (90+6’) மிஷெல் அக்யெமாங் கோலடித்து, இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்டாா்.
இதையடுத்து ஆட்டம் 1-1 என சமநிலையை எட்ட, எக்ஸ்ட்ரா டைம் அளிக்கப்பட்டது. கடைசி நேர கோலால் உத்வேகம் பெற்ற இங்கிலாந்து ஆக்ரோஷமாக விளையாட, அதற்கான பலனாக 119-ஆவது நிமிஷத்தில் அதன் வீராங்கனை கிளோ கெல்லி கோலடிக்க, இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றது.
எஞ்சிய நேரத்தில் இத்தாலிக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, இங்கிலாந்து வெற்றி பெற்றது. வெற்றியின் நெருக்கத்திலிருந்த இத்தாலி அணியினா், எதிா்பாராத இந்த அதிா்ச்சித் தோல்வியால் களத்திலேயே கண்ணீா் சிந்தினா்.