மோசடியாக பங்குகளை மாற்றியதாகக் குற்றச்சாட்டு: கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோ...
``முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்; ஸ்டாலின் பக்கம்தான் முருகன்..” - சேகர் பாபு
மதுரையில் இந்து முன்னணி சார்பில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.டி.இளங்கோவன் தெரிவித்திருந்தார்.
திமுக தலைமையிலான அரசு, இந்து அறநிலையத் துறை சார்ப்பில் வருகிற ஜூலை 7ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு நடத்துகிறது. சீமான் தமிழில் இந்தக் குடமுழுக்கை நடத்தவேண்டும் என்று கூற, தமிழிலும் ஓதப்படும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.
இப்படி முருகனை வைத்துத்தான் இப்போது தமிழக அரசியலில் சர்ச்சைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பவன் கல்யாண், யோகி ஆதித்யநாத் இந்து முன்னணி சார்பில் வரும் 22ஆம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "ஆந்திரவில் இருக்கும் பவன் கல்யாணுக்கும், உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் யோகி ஆதித்யநாத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்.
எந்த காலத்திற்கும் இல்லாத அளவிற்கு 117 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கை இந்த ஆட்சியில் நடத்தியிருகோம். இந்து அறநிலையத் துறை சிறப்பாக செயல்பாட்டுக் கொண்டிருக்கிறது.
நாங்கள் கடவுளை வைத்து அரசியல் செய்யவில்லை. ஆனால், பாஜக முருகன் மாநாடு என கடவுளை வைத்து அரசியல் செய்கிறது. இந்த மாநாடு தேவையற்றது. முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பக்கத்தில்தான் தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.

இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார், "ஏன் ஆந்திராவில் இருப்பவர்களும், உத்திரப்பிரதேசத்தில் இருப்பவர்களும் முருகனை வழிபடக்கூடாதா? பவண் கல்யாண் முருக பக்தர். பலமுறை அவர் முருகனின் அறுபடை வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார். அவர் முருகன் மாநாட்டிற்கு வருவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs