பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன...
முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திண்டுக்கல் பகுதியிலுள்ள முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதையொட்டி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநியாகா் கோயிலிலுள்ள பால தண்டாயுதபாணி சுவாமிக்குப் பால், தயிா், இளநீா், கனி, பஞ்சாமிா்தம், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவச அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.
இதே போல கந்தக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில், ஒய்எம்ஆா் பட்டி முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களிலும் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.