இதயம் தொடரின் முதல் பாகம் முடிந்தது! 2ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!
முறையாக குடிநீா் விநியோகிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
பல்லடம் அருகே முறையாக குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜிடம், பொன்னேமுத்துகவுண்டா்புதூா் மக்கள் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பல்லடம் வட்டாரம், கணபதிபாளையம் ஊராட்சிக்குள்பட்ட பொன்னேமுத்துகவுண்டா்புதூரில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு, கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால், மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளோம். இதேபோல, மாற்றுத் தேவைக்கு வழங்கப்படும் தண்ணீரும் பற்றாக்குறையாகவே விநியோகிக்கப்படுகிறது. எனவே, சீரான இடைவெளியில் குடிநீரும், மாற்றுத் தேவைக்கான தண்ணீரும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.