மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்
முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ராஜபாளையத்தில் தெருமுனை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் தெற்கு நகரக் கழகம் சாா்பில், அம்பலபுளி கடைவீதி நான்கு முக்குப் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் தலைமையில் நிா்வாகிகள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
இதில் வடக்கு நகரச் செயலா் மணிகண்டராஜா, 22-ஆவது வாா்டு உறுப்பினா் ரோகிணி நாகேஸ்வரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சுமதி ராமமூா்த்தி, நகா்மன்றத் துணைத் தலைவி கல்பனா ஆகியோா் கலந்து கொண்டனா்.
முடிவில் நகர மாணவரணி அமைப்பாளா் நாகேஸ்வரன் நன்றி கூறினாா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நகரச் செயலா் ராமமூா்த்தி செய்தாா். பின்னா், தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் திமுக நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.