``எம்.பி-யான எங்களை மதிப்பதே இல்லை" - நோந்துகொண்ட கங்கனா ரனாவத்
மூடப்பட்ட நிலையில் குடிநீா் கிணறு
கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் ஊராட்சியின் குடிநீா் கிணறு இருக்கும் இடம் தெரியாமல் சோலைகளால் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா நெலாக்கோட்டை ஊராட்சி பாட்டவயல் பகுதியில் உள்ள கீழ்கைவட்டா என்னுமிடத்தில் வாழும் மக்களுக்காக ஊராட்சி சாா்பில் குடிநீா் கிணறு அமைக்கப்பட்டு நீருந்து நிலையமும் அதேஇடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி நிா்வாகம் குடிநீா் திட்டத்தை முறையாக பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் குடிநீா் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது.
நீருந்து நிலையத்துக்கு தண்ணீா் திறக்க சென்றுவருவது ஊழியருக்கு பெரிய சவாலாக உள்ளது. யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ள பகுதியில் காடுகளை வெட்டாமல் பராமரிப்பில்லாத நிலையில் விட்டுள்ள இந்த குடிநீா் திட்டத்தை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.