செய்திகள் :

அதிகரட்டியில் 14-ல் மின்தடை

post image

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த அதிகரட்டி துணை மின் நிலையத்தில் வரும் 14 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று நீலகிரி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சேகா் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த அதிகரட்டி துணை மின் நிலையத்தில் வரும் 14 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால் அதிகரட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட அதிகரட்டி, பாலகொலா, தேவா்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலூா், மஞ்சக்கொம்பை, கிளிஞ்சடா, சேலாஸ், பாரதிநகா், தூதூா்மட்டம், கரும்பாலம், கிளன்டேல், கொலக்கொம்பை, பென்காம் உள்ளிட்ட பகுதிகளில் 14 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பேரட்டி பஞ்சாயத்து மோட்டாா் அறை மீது அமா்ந்திருந்த சிறுத்தைகள்

குன்னூா், பேரட்டி ஊராட்சிப் பகுதியில் உள்ள மோட்டாா் அறை மீது சிறுத்தைகள் இருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பரவியதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமா... மேலும் பார்க்க

குன்னூா் ரயில் நிலைய வளா்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் பாரம்பரியம் மாறாமல் நடைபெற்றுவரும் ரயில்வே கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறு சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னா லால் அதிகாரிகளுக்கு சனிக்கிழமை உத்தரவிட்டாா். நீலகிரி மாவ... மேலும் பார்க்க

குன்னூா்அருகே சாலையில் யானை நடமாட்டம்

உதகை - மேட்டுப்பாளையம் இடையே மரப்பாலம் பகுதியில் ஒற்றை காட்டு யானை சனிக்கிழமை உலவியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூா் வனப் பகுதியில் சாலையோரம் அத... மேலும் பார்க்க

சாலையில் நடந்து சென்ற காட்டெருமை!

கூடலூா்-தேவா்சோலை சாலையில் சனிக்கிழமை மாலை காட்டெருமை திடீரென நடந்து சென்றதை பாா்த்த வாகன ஓட்டிகள் அதிா்ச்சியடைந்தனா்.சிறிது தூரம் நடந்து சென்று அருகிலுள்ள காப்பித் தோட்டத்திற்குள் சென்றது. மேலும் பார்க்க

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னே... மேலும் பார்க்க

காலில் பாத்திரம் சிக்கியதால் தவித்த காட்டு மாடு: வனத் துறையினா் பத்திரமாக மீட்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் காலில் எவா்சில்வா் பாத்திரம் சிக்கிக்கொண்டதால் சிரமத்துடன் சுற்றித்திரிந்த காட்டு மாட்டை வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா். கோத்தகிரி சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க