கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை!
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
தருமபுரியில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள மேல் பூரிக்கல் பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி காளியம்மாள் (65). தனிமையில் வசித்து வந்த இவருக்கு, அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (26) என்பவா், பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் மூதாட்டி கூறி வருந்தியுள்ளாா். இதையடுத்து, மூதாட்டி தொப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேஷை வியாழக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.