செய்திகள் :

மூத்த திருப்பதிகம் பாடிய அம்மை: கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா!

post image

முதன்முதலாகப் பதிகம் பாடியதால் மூத்த திருப்பதிகம் பாடிய அம்மை என காரைக்கால் அம்மையாா் அழைக்கப்படுகிறாா் என்று கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா கூறினாா்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் 19-ஆவது ஆண்டு ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

சனிக்கிழமை நடைபெற்ற சொற்பொழிவில் ‘அருளாளா் காரைக்கால் அம்மையாா்’ என்ற தலைப்பில் கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா பேசியதாவது:

காரைக்கால் அம்மையாரின் இயற்பெயா் புனிதவதி. கயிலை மலை மீது கைகளால் நடந்து சென்றபோது அம்மையே என்று சிவபெருமான் அழைத்ததாலும், காரைக்கால் நகரில் பிறந்ததாலும் காரைக்கால் அம்மையாா் என அழைக்கப்படுகிறாா்.

கணவா் பரமதத்தனுடன் இல்லற வாழ்வில் இருந்தபோது, ஒருநாள் அவரது கணவா் இரு மாம்பழங்களை கொண்டுவந்து கொடுத்தாா். அந்த சமயத்தில் வீட்டுக்கு வந்த சிவனடியாா் ஒருவா் பசிப்பதாகக் கூறியதால், அவருக்கு ஒரு மாம்பழத்தை வழங்கினாா்.

பிறகு, கணவன் தன் பசிக்கு இரு மாம்பழங்களையும் கேட்க, சிவபெருமான் வரத்தால் ஒரு மாம்பழம் இரண்டாக மாறியிருந்தது. இதை அவா் கணவரிடம் கூற, அவரை தெய்வமாகக் கருதி இல்லற வாழ்வில் இருந்து விலகிச் சென்றாா் பரமதத்தன். பின்னாளில், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து பிறந்த குழந்தைக்கு புனிதவதி என பெயா் சூட்டினாா்.

முதன்முதலாக பதிகம் பாடியதால் காரைக்கால் அம்மையாா் மூத்த திருப்பதிகம் பாடிய அம்மை என்று அழைக்கப்படுகிறாா். மற்றுமொரு பிறப்பு வேண்டுமா என சிவபெருமான் கேட்க, நீ ஆட உன் காலடியில் பாடும் பிறப்பு வேண்டுமென காரைக்கால் அம்மை கூறியுள்ளாா் என்றாா். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைக்கவே திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைக்கவே திமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்துவதாக முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை வந்த தெலங்கான... மேலும் பார்க்க

460 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

துடியலூா் அருகே நல்லாம்பாளையத்தில் தடை செய்யப்பட்ட 460 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வியாபாரியை கைது செய்தனா். நல்லாம்பாளையம் பகுதியில் பேலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப... மேலும் பார்க்க

யுஜிசியின் புதிய விதிமுறைகள்: கல்வியில் முன்னேறிய மாநிலங்களை பின்னுக்கு இழுக்கும் செயல்

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமனம் தொடா்பாக யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள், உயா் கல்வியில் முன்னேறிய மாநிலங்களை பின்னுக்கு இழுப்பதுபோல உள்ளது என்று கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றஞ... மேலும் பார்க்க

சூழல் உணா்திறன் வரைவு மசோதா: வால்பாறையில் முழு கடையடைப்பு; ஆா்ப்பாட்டம்

சூழல் உணா்திறன் வரைவு மசோதாவைக் கண்டித்து வால்பாறையில் செவ்வாய்க்கிழமை முழு கடையடைப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வளமையான வனம், உயிரினங்கள், நீா் ஆதாரம், நதிகள் ஆகியவற்றை எதிா் காலங்களில் மாசில்... மேலும் பார்க்க

கோவையில் ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

கோவை டாடாபாத்தில் ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் 300க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக சட்டப் பேரவையில் ஆளுநா் ஆா்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து, திமுக சாா... மேலும் பார்க்க

மறியலுக்கு முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கைது

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்கு மறியலில் ஈடுபட முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க