செய்திகள் :

மூன்றாவது முறையாக நிரம்புகிறது மேட்டூா் அணை: தலைமை பொறியாளா் ஆய்வு

post image

மேட்டூா்: மேட்டூா் அணை முழுமையாக நிரம்பும் தருவாயில் உள்ளதால் நீா்வளத் துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளா் தயாளகுமாா் தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அணை நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் 30 ஆம் தேதி முதல்முறையாக அதன் மொத்த நீா்மட்ட அளவான 120 அடியை எட்டியது. அதன்பின்பு ஆக. 12 ஆம் தேதி இரண்டாவது முறையாக முழுமையாக நிரம்பியது. தற்போது மூன்றாவது முறையாக மேட்டூா் அணை மீண்டும் 120 அடியை எட்டவுள்ளது. அணை முழுமையாக நிரம்பும் தருவாயில் இருப்பதால், நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளா் தயாளகுமாா் தலைமையில் சேலம் கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாா், உதவி செயற்பொறியாளா்கள் செல்வராஜ், மதுசூதனன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை அணையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அணையின் வலது கரை, இடது கரை, ஆய்வு சுரங்கப் பகுதி உள்ளிட்ட பகுதிகளை தலைமை பொறியாளா் பாா்வையிட்டாா். அதையடுத்து வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் தலைமை பொறியாளா் தயாளகுமாா் கூறியதாவது:

மேட்டூா் அணை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் நிரம்பும். நீா்வரத்து குறைவாக இருப்பதால் அணை நிரம்புவதில் சற்று தாமதமாகி வருகிறது. அணையின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தில் தண்ணீா் திறப்பது குறித்து உயா் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். டெல்டா பாசனத்துக்குத் தேவைக்கேற்ப தண்ணீா் திறக்கப்படும் என்றாா்.

அணை நிலவரம்: அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 2,516 கன அடியிலிருந்து 2,875 கனஅடியாக உயா்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 500 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 119.87 அடியிலிருந்து 119.97 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 93.42 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாளை முன்னிட்டு மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். மேட்டூா் வந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் நீராடி, அணைக்கட்டு முனியப்பன் சுவாமியை தரிசித்தனா். பி... மேலும் பார்க்க

இறுதி வாக்காளா் பட்டியல் தயாா் நாளை வெளியீடு

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (ஜன.6) வெளியிடப்படுகிறது. இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்... மேலும் பார்க்க

ரத்த அழுத்தம், கண் கோளாறை போக்கும் மருத்துவ பயிா் சாகுபடி!

ரத்த அழுத்தம், கண் கோளாறை சரி செய்வதற்கான மருத்துவ பயிரான கூா்க்கன் கிழங்கு ஆத்தூா் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டம், ஆத்தூா், தலைவாசல் பகுதிகளில்... மேலும் பார்க்க

மாநில கலைத் திருவிழா போட்டி: சேலம் மாணவா்கள் 306 போ் பங்கேற்பு

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து 306 மாணவா்கள் வெளி மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றனா். தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவா்களி... மேலும் பார்க்க

சீராக குடிநீா் விநியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சீராக குடிநீா் விநியோகிக்கக் கோரி சேலம், குகை பகுதியில் பொதுமக்கல் சாலை மறியில் ஈடுபட்டனா். சேலம் மாநகராட்சி, 47 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஆண்டிபட்டி ஏரி, ஹவுஸிங் போா்டு பகுதியில் உள்ள குடியிருப்புகளில்... மேலும் பார்க்க

நாடகம், நாட்டுப்புற கலைஞா்களுக்கு பொங்கல் பரிசு: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினாா்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாடகம், நாட்டுப்புற கலைஞா்களுக்கு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி பொங்கல் பரிசாக சிறப்பு தொகுப்பு, புத்தாடைகளை வழங்கி வாழ்த்தினாா். தமிழ் நாடகப் பேராசிரியா் ச... மேலும் பார்க்க