மூவர் அரைசதம்..! இறுதிக்குச் செல்லுமா தென்னாப்பிரிக்கா? பாகிஸ்தானுக்கு 353 ரன்கள் இலக்கு!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடர் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ஒரு பயிற்சி ஆட்டம் போல நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு அணியும் தங்களுக்கு உள்ள மற்றொரு அணியுடன் ஒவ்வொரு ஆட்டத்தில் விளையாட வேண்டும். முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.
இதையும் படிக்க... சஞ்சு சாம்சனுக்கு அறுவைச் சிகிச்சை! ஐபிஎல்லில் பங்கேற்பாரா?
அதன்படி, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.
அதன்படி, தென்னாப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்க கேப்டன் 13 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்து ரன் அவுட்டாகி வெளியேறினார். டோனி டி ஜோர்ஜி 22 ரன்களில் ஆட்டமிழக்க, அறிமுகப் போட்டியில் 150 ரன்கள் விளாசிய பிரீட்ஸிக்கி 10 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 83 ரன்களும், விக்கெட் கீப்பர் கிளாசன் 11 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 87 ரன்களும் விளாசி வெளியேறினர். கடைசியில் அதிரடி காட்டிய வெரைன் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 44* ரன்களுடன் களத்தில் இருந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. இதனால், 353 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
இதையும் படிக்க... அதிவேக 16,000 ரன்கள்..! சச்சினின் சாதனையை முறியடித்த கோலி!