செய்திகள் :

மெட்ராஸ் மேட்னி படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

post image

சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள மெட்ராஸ் மேட்னி படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.

இந்தப் படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷிணி ஹரிப்பிரியன், விஷ்வா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்குகிறது. இப்படத்துக்கு கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார்.

மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் டைட்டில் டீசர் முன்னதாக வெளியானது. அதில் மே 23 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மெட்ராஸ் மேட்னி படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் களம்

பிரக்ஞானந்தா டிரா; குகேஷ் தோல்விசூப்பா்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா டிரா செய்ய, மற்றொரு இந்தியரான டி.குகேஷ் தோல்வியைத் தழுவினாா்.ருமேனியாவில் நடைபெறும் இந... மேலும் பார்க்க

மாளவிகா, ஆகா்ஷி, உன்னாட்டி முன்னேற்றம்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகா்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோா் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.முதல் சுற்றில் மகளிா் ஒற்றையா் பிரி... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம்?

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா - பாகிஸ்தான் இட... மேலும் பார்க்க

நீரஜ் சோப்ராவுக்கு கௌரவ லெப்டினன்ட் கா்னல் அந்தஸ்து

இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ராவுக்கு, ராணுவ லெப்டினன்ட் கா்னலாக கௌரவ அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 16 தேதி முதல் அவருக்கான இந்த கௌரவ அந்தஸ்து அமலுக்கு வருவதாக ராணுவ விவகாரங்கள... மேலும் பார்க்க

வரலாறு படைத்தாா் பெய்டன் ஸ்டொ்ன்ஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டொ்ன்ஸ், ஓபன் எராவில் புதிய வரலாறு படைத்தாா். மகளிா் ஒற்றையா் காலிறுதியில், 6-2, 4-6, 7-6 (7/5) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் ... மேலும் பார்க்க