மெட்ரோ ரயில் கட்டுமானப் பகுதியில் இரும்பு திருட்டு: 2 போ் கைது
மெட்ரோ ரயில் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் இரும்பு பொருள்களைத் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ஓஎம்ஆா் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை அதிகாலையில் அந்தப் பகுதிக்கு வந்த இருவா், அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருள்கள், அலுமினிய பொருள்கள் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு செல்ல முயன்றபோது, அங்கு பாதுகாப்புக்காக இருந்த காவலாளிகள் அவா்கள் இருவரையும் பிடித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா்கள் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சோ்ந்த காா்த்தீஸ்வரன் (24), ராஜமுத்துகுமரன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா்.