மெட்ரோ ரயில்: திரும்பப்பெறப்படும் குழு பயணச்சீட்டுக்கான தள்ளுபடி!
சென்னை மெட்ரோ ரயிலில் வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டுக்கான தள்ளுபடிக் கட்டணம் மார்ச் 1 ஆம் தேதி முதல் திரும்பப் பெறப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கு 10% தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி 1.3.2025 முதல் திரும்பப் பெறப்படுகிறது என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறது.
இதையும் படிக்க: தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர்: அண்ணாமலை

டிஜிட்டல் பயணச்சீட்டுக்கு மாறுவதை எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதே குழு பயணச்சீட்டை பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் 20% தள்ளுபடி கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.