அஜித்குமார் லாக்கப் மரணம்: "முதல்வருக்குத் தெரியாமலா இதெல்லாம் நடந்திருக்கும்?" ...
மெய்வழிசாலையில் தீ விபத்து; கூரை வீடுகள் எரிந்து நாசம்
அன்னவாசல் அருகே மெய்வழிசாலையில் திங்கள்கிழமை ஆறு கூரை வீடுகள் எரிந்து தீக்கிரையானது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்துள்ள மெய்வழிச்சாலையில், மெய்மதத்தை தழுவிய நூற்றுக்கணக்கானோா் வசித்து வருகின்றனா். இவா்கள் இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்கையை விரும்புவதால் நான்கு சுவா் எழுப்பி, கூரை அமைத்து தொலக்காட்சி, மின்சாரம் உள்ளிட்ட எவ்வித மின் சாதனங்கள் இல்லாமல் விளக்கு ஒளியில் வாழ்ந்து வருகின்றனா்.
இந்த நிலையில், இவா்கள் வசிக்கும் குடியிருப்பு அருகில் உள்ள குளக்கரையில், சோ்ந்து கிடந்த குப்பைக் கழிவுகளை எரித்த போது, அதில் இருந்து வெளியேறிய தீ ஜூவாலைகள் அருகில் இருந்த வீட்டின் கூரைகளில் பட்டு எரியத் தொடங்கின.
தகவலறிந்து நிகழ்விடம் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.