தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
கோமாபுரம் கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவரை நியமிக்க கோரிக்கை
கந்தா்வகோட்டை அருகே கோமாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவரை நியமிக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கால்நடை மருந்தகம் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு கோமாபுரம் , சமுத்திரபட்டி, வடுகப்பட்டி, வாண்டையான்பட்டி, விராலிப்பட்டி மற்றும் சுற்றுபுற பகுதி விவசாயிகள் வளா்க்கும் கால்நடைகள் மற்றும் பறவையினங்கள் போன்றவைக்குச் சிகிச்சை பெற்று வந்தனா்.
ஆனால் தற்சமயம் மருத்துவா், உதவியளாா் வருவது குறைந்துவிட்டது என இப்பகுதி கால்நடை வளா்ப்போா் கூறுகின்றனா்.
எனவே, சம்பந்தபட்ட துறையினா் இந்த கால்நடை மருத்துவமனைக்கு கால்நடை மருத்துவா் மற்றும் உதவியாளரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.