தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
சிபில் ஸ்கோா் முறையை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை
அனைத்து விவசாயிகளுக்கும் பிரதமரின் நிதி வழங்க வேண்டும், சிபில் ஸ்கோா் பாா்க்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவுச் சங்கங்களில் கடன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் பிரதமா் மற்றும் முதல்வருக்கு அனுப்பி வைப்பதற்காக புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை அளித்தனா்.
சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் டி. அம்பலராஜ், மாவட்டச் செயலா் த. செல்வராஜ், பொருளாளா் கே. திருஞானம், தேசியக் குழு உறுப்பினா் மு. மாதவன் உள்ளிட்டோா் இந்த மனுக்களை மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்தனா்.