Doctor Vikatan: மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போதுஎகிறும் BP; கட்டுப்படுத்த முட...
86 காவலா்களுக்கு பதவி உயா்வு
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 86 முதல் நிலைக் காவலா்களுக்கு, தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் காவலா்களுக்கான பதவி உயா்வு வழங்கும் காலத்தைத் தளா்வு செய்து முதல்வா் ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்தாா்.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஆண்டுகள் பணிமுடித்த முதல் நிலைக் காவலா்கள் 86 பேருக்கு தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா இதற்கான ஆணைகளை காவலா்களுக்கு திங்கள்கிழமை வழங்கிப் பாராட்டினாா்.