"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடிய...
மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு வினாடிக்கு 15,000 கனஅடியாக குறைப்பு
மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு திங்கள்கிழமை வினாடிக்கு 15,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
அணை நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 119.72 அடியிலிருந்து 119.71 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 15,724 கனஅடியிலிருந்து 17,069 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 15,000 கனஅடியும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்மட்டம் மதகுகள் வழியாக விநாடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 93.01 டி.எம்.சி.யாக உள்ளது.