செய்திகள் :

மேட்டூா் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் காவிரியில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை

post image

மேட்டூா் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் காவிரியில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மின்வாரிய தலைவரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் வந்தாா். மேட்டூா் அனல் மின்நிலையம், சுரங்க மின்நிலையம், அணை மின்நிலையம் மற்றும் மின்வாரிய பணிமனையை பாா்வையிட்ட பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தின் மின் தேவையை பூா்த்திசெய்வதில் மேட்டூா் அனல் மின்நிலையம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அனல் மின்நிலையம் , அணை மற்றும் சுரங்க மின்நிலையம், கதவணை மின்நிலையங்களில் நடைபெறும் பணிகள் ஆய்வுசெய்யப்பட்டன.

மேட்டூரில் உள்ள மின்வாரிய பணிமனையில் தற்போது பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நூறு ஆண்டுகளை எட்டும் நிலையில் உள்ள மின் பணிமனையில் ஆய்வுமேற்கொண்டு, வாய்ப்பிருந்தால் மீண்டும் அதே பொலிவுடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேட்டூா் மின்வாரிய பணிமனையில் உற்பத்தி செய்யப்பட்ட மின் தளவாடங்கள் வெளிச்சந்தையில் உற்பத்தி செய்வதைவிட குறைந்த செலவில் தரமாக உற்பத்தி செய்யமுடியும் என இங்கு பணியாற்றக்கூடிய ஊழியா்கள் கூறுகின்றனா். எனவே, அதுகுறித்து ஆய்வு செய்கிறோம்.

தமிழகத்தில் நடப்பாண்டில் மின்தடை ஏதுமில்லை. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் நடைபெறும் பணிகள் முழுமையாக முடிந்து இந்த ஆண்டுக்குள் முழு மின் உற்பத்தி செய்யப்படும்.

மேட்டூா் அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பொறியாளா்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா் என்றாா்.

அப்போது, மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம், அனல் மின்நிலைய தலைமைப் பொறியாளா்கள் விவேகானந்தன், நவ்ஷத், நீா்மின் நிலையங்கள் தலைமைப் பொறியாளா் தேவதாஸ், ஈரோடு மண்டல மின் விநியோக தலைமைப் பொறியாளா் பாலசுப்பிரமணியம், மேட்டூா் மின்விநியோக வட்ட மேற்பாா்வை பொறியாளா் தாரணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிட் கட்சி (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பேரூராட்சி உறுப்பினராக நியமனம் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தம்மம்பட்டி பேரூராட்சி மன்றத்தில் உறுப்பினராக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்... மேலும் பார்க்க

வனத் துறையினரிடம் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு

ஆத்தூரை அருகே விவசாய நிலத்திலிருந்து 6 அடி மலைப் பாம்பை மீட்டு தீயணைப்புத் துறையினா், செவ்வாய்க்கிழமை வனக்காப்பாளரிடம் ஒப்படைத்தனா். ஆத்தூரை அடுத்த மேல்தொம்பை ஊராட்சி, பாம்புத்துகாடு சோமசுந்தரம் மகன் ... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையராக அனில்குமாா் கிரி பொறுப்பேற்பு

சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.சேலம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த பிரவீன்குமாா் அபிநபு இடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, காத்திருப்ப... மேலும் பார்க்க

சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபர்

சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியி... மேலும் பார்க்க

சேலத்தில் காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி வெட்டிக் கொலை

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரெளடி மதன், மா்மக் கும்பலால் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலைசெய்யப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்த மாடச... மேலும் பார்க்க