மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் போலீஸாா் சோதனை!
ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை, புல்பத்தி மலை அடிவாரப் பகுதிகளில் கள்ளச் சாரயம், போதைப் பொருள் விற்கப்படுகிா என மதுவிலக்கு காவல் ஆய்வாளா் காசிராஜன், சேத்தூா் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகராஜ், போலீஸாா் சோதனையிட்டனா்.
பின்னா், விவசாயிகள், ஆடு, மாடு மேய்ப்பவா்களிடமும் இந்தப் பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை நடைபெற்றால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தொலைப்பேசி எண்களை போலீஸாா் வழங்கினா்.