ஊழல் செய்ய புதுப்புது வழிமுறைகளை கண்டறியும் அரசு அதிகாரிகள்! உயா்நீதிமன்றம் அதி...
மேலகரத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் மேலகரத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நீண்டகாலம் பணிசெய்துவரும் பணியாளா்களை நிரந்தப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பொன்மலா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணிமேகலை, மாவட்டப் பொருளாளா் காளியம்மாள், மாநிலச் செயற்குழு உறுப்பினா் டேவிட் பாக்கிய ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.