இடைகாலில் அண்ணா தொழிற்சங்க பொதுக்கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் மே தின விழா பொதுக்கூட்டம் இடைகாலில் நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ தலைமை வகித்தாா்.
மாவட்ட அவைத் தலைவா் வி.பி.மூா்த்தி, மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ.மாரியப்பன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா், ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் தொகுத்து வழங்கினாா். மாநில அமைப்புச் செயலா் சுதா பரமசிவன், அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலா் கந்தசாமி பாண்டியன், தலைமைப் பேச்சாளா் தளவாய் ஆகியோா் பேசினா்.
இதில், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கிட்டுராஜா, ஒன்றியச் செயலா்கள் மருத்துவா் சுசீகரன், பெரியதுரை, நகர செயலா்கள் எம்.கே.முருகன், சங்கரபாண்டியன், பேரூா் செயலா் காா்த்திக், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் செல்லப்பா, கருப்பையாதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.