தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தென்காசியில் மே13-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்
தென்காசியில் இம்மாதம் 13ஆம் தேதி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளைத் தீா்க்கும் வகையில், மாதந்தோறும் 2 ஆவது செவ்வாய்க்கிழமை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார அளவிலும், 2 மாதங்களுக்கு ஒருமுறை 2ஆவது செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் முன்னிலையிலும் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்படி, இம்மாதம் 13ஆம் தேதி அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறவுள்ள முகாம்களிலும், மாவட்ட அளவில் ஆட்சியா் வளாகத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் முன்னிலையில் நடைபெறவுள்ள முகாமிலும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம் என்றாா் அவா்.