செய்திகள் :

மேலசோ்ந்தபூமங்கலத்தில் உயா்கோபுர மின் விளக்கு

post image

ஆத்தூா் அருகே மேல சோ்ந்தபூமங்கலத்தில் சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனம் சாா்பில் ரூ. 1.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

சோ்ந்தபூமங்கலம் ஊராட்சித் தலைவா் சந்திரா மாணிக்கவாசகம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நவீன், ஊா்த் தலைவா் சுப்பிரமணியன், திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் மாணிக்கவாசகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

டி.சி.டபிள்யூ. நிறுவன உதவி துணைத் தலைவா் மீனாட்சிசுந்தரம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உயா்கோபுர மின்விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

நிறுவனத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி பிரகாஷ், அதிகாரிகள் வினோத், நாகராஜன், மின்வாரிய அலுவலா் காசிராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருச்செந்தூா் 170 கிலோ பாலித்தீன் பொருள்கள் பறிமுதல்

திருச்செந்தூரில், 170 கிலோ பாலித்தீன் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்தின் உத்தரவு, திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் கண்மணியின் வழிகாட்டுதல் ஆகியவற்றின்... மேலும் பார்க்க

வீடு கட்ட அனுமதிக்குமாறு பேட்மாநகரம் இஸ்லாமியா்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் பகுதியில் வீடு கட்ட அரசு விதித்துள்ள தடையை நீக்குமாறு அப்பகுதி இஸ்லாமியா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளி... மேலும் பார்க்க

திருட்டு வழக்கு: 3 போ் கைது

கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி முத்து நகரை சோ்ந்தவா் சுந்தா். சென்னையில் ரயில்வே துறையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிற... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் தற்கொலை

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த முருகானந்தம் மகன் மகேஷ்குமாா் (28). தனியாா் எண்ணெய் நிறு... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரை வந்த பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு விருதுநகா் மாவட்டத்தை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரை வந்தனா். இக் கோயிலுக்கு, தைப்பொங... மேலும் பார்க்க

திமுக கூட்டணி உடைந்து கொண்டிருக்கிறது: பாஜக மாநில துணைத் தலைவா்

திமுக கூட்டணி உடைந்துகொண்டிருப்பதாக பாஜக மாநில துணைத்தலைவா் நாராயணன் திருப்பதி தெரிவித்தாா். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவம் என்ற மருத்துவ சேவை வாகன ஊா்தியை தொடங்கி... மேலும் பார்க்க