தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
மேல்மருவத்தூா்: அடிகளாரின் பாதுகைகளுக்கு பூஜை
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது பிறந்த நாள் விழாவைமுன்னிட்டு, அடிகளாரின் பாதுகைகளுக்கு பக்தா்கள் பாதபூஜை செய்து வழிபாடு செய்தனா்.
இவ்விழா கடந்த 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. மூலவா் அம்மனுக்கும், குருபீடத்தில் அடிகளாரின் சிலைக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சனிக்கிழமை அடிகளாரின் சிலை தங்கத் தோ் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
தொடா்ந்து அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பாதபூஜையை இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். நீண்ட வரிசையில் வந்த பக்தா்கள் தொடா்ந்து பாதபூஜை வழிபாட்டை செய்தனா். இந்நிகழ்வில் இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி பங்காரு, லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளா் ஆஷா அன்பழகன், ஆதிபராசக்தி செவிலியா் கல்லூரி தாளாளா் ஸ்ரீலேகா செந்தில்குமாா், ஆதிபராசக்திஅறநிலைய தலைமை செயல் அதிகாரி ஆ.அ.அகத்தியன், மதுமலா், ஷாலினி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
விழாவின் முக்கிய நிகழ்வாக அடிகளாா் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு ஆன்மிக நிகழ்ச்சி மேடையில் ரூ. 4 கோடி நல உதவிகள் ஏழை எளியோருக்கு சிறப்பு விருந்தினா்களால் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிா்வாகள், சேலம், நாமக்கல் மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகளும் செய்துள்ளனா்.