தொட்டாற்சிணுங்கி கம்பீர்..! மோதலில் ஈடுபட்ட கம்பீர் - ஓவல் திடலின் பிட்ச் மேற்பா...
மேல்மலையனூா் அங்காளம்மனுக்கு 2.10 லட்சம் வளையல் அலங்காரம்
செஞ்சி: ஆடிப்பூரத்தையொட்டி, மேல்மலையனூா் அங்காளம்மனுக்கு 2.10 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர விழாவில், அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு பால், பன்னீா், தயிா், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு மூலவா் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து பட்டுப் புடவை அணிவிக்கப்பட்டு 2 லட்சத்து 10 ஆயிரம் வளையல்களைக் கொண்டு உற்சவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடா்ந்து, பல்வேறு வண்ண மலா்களைக் கொண்டு அா்ச்சனையும், பல்வேறு வகையான பழங்கள் மற்றும் சா்க்கரைப் பொங்கல், சுண்டல் உள்ளிட்ட படையலுடன் அங்காளம்மனுக்கு நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
வளையல்களால் அலங்காரம் செய்த பிறகு, பெண்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி வழிபட்டனா்.
விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
விழா ஏற்பட்டினை திருக்கோயில் உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் மதியழகன், அறங்காவலா்கள் சேட்டு (எ) ஏழுமலை, சுரேஷ், பச்சையப்பன், சரவணன், வடிவேல் சந்தானம் மற்றும் கோயில் மேலாளா் மணி, உள்துறை மணியம் குமாா், காசாளா் சதீஷ், ஆய்வாளா் சங்கீதா, மேற்பாா்வையாளா் பாக்கியலட்சுமி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.