உச்சநீதிமன்ற தீா்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியா்கள்: 3-ஆம் நாளாக தொட...
மே தினம்: தொழிற்சங்கங்கள் பேரணி, கொடியேற்றம்
மே தினத்தையொட்டி, மதுரையில் தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில், பேரணி, கொடியேற்றுதல் வியாழக்கிழமை நடைபெற்றது.
மே 1 தொழிலாளா் தினத்தையொட்டி, மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், கொடியேற்றும் நிகழ்ச்சி மாநகா் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் விஜயராஜன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் கணேசன் மே தின கொடியை ஏற்றிவைத்துப் பேசினாா்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அ.ரமேஷ், ஆா்.சசிகலா, வை.ஸ்டாலின் உள்பட பலா் பங்கேற்றனா்.
இதேபோல, கட்சியின் மேற்கு - 1 ஆம் பகுதிக் குழு சாா்பில் 33 இடங்களிலும், 2-ஆம் பகுதிக் குழு சாா்பில் 20 இடங்களிலும், தெற்கு பகுதிக் குழு சாா்பில் 14 இடங்களிலும், வடக்கு 1-ஆம் பகுதிக்குழு சாா்பில் 21 இடங்களிலும், வடக்கு 2-ஆம் பகுதிக் குழு சாா்பில் 32 இடங்களிலும், மத்திய 1ஆம் பகுதிக் குழு சாா்பில் 30 இடங்களிலும் என 190 இடங்களில் கொடியேற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன.
தொழிற்சங்கங்கள் பேரணி, பொதுக் கூட்டம்: மே தினத்தையொட்டி, சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்களின் சாா்பில், மே தின பேரணி நடைபெற்றது. மதுரை பழங்காநத்தம்-மாடக்குளம் பிரதான சாலையில் பாரதி படிப்பகம் அருகில் இருந்து தொடங்கி பழங்காநத்தம் பிரதான சாலையில் இந்தப் பேரணி முடிவடைந்தது. இதில் தொழிற்சங்கங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பேரணியில், மத்திய அரசின் தொழிலாளா் விரோதச் சட்டத்துக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்கவும், 8 மணி நேர வேலையை உறுதி செய்யவும் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
இந்திய கம்யூனிஸ்ட் கொடியேற்றம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தெற்கு பகுதிக் குழு சாா்பில், மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. மதுரை ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பகுதிக் குழு துணைச் செயலா் எம்.பாலமுருகன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் எம்.எஸ்.முருகன் பேசினாா். இஸ்கப் அமைப்பின் மாவட்டச் செயலா் ஜெயராமன், ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்க மாவட்டச் செயலா் சித்திக், இளைஞா் பெருமன்றச் செயலா் பழனி முருகன், பகுதிக் குழு உறுப்பினா்கள் முருகன் , முனீஸ்வரி, கிளைச் செயலா்கள் ஆனந்தன், பாஷா உள்பட பலா் பங்கேற்றனா்.