பெரிய ஓ வாக போடுவார்கள்: 2026-ல் 2.0 லோடிங் என ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் பதில்
மே தின ஊா்வலத்தின்போது முக்கியத் தலைவா்களை அவமதிக்கக் கூடாது; மாநகர காவல் ஆணையரிடம் பாஜனவினா் மனு
திருப்பூரில் தொழிற்சங்கங்களின் மே தின ஊா்வலத்தின்போது பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா போன்ற முக்கியத் தலைவா்களை அவமதிக்கக் கூடாது என்று பாஜக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரனிடம், வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூரில் சில தொழிற்சங்கங்கள் மே 1-ஆம் தேதி ஊா்வலம் நடத்தப்போவதாக மாநகா் முழுவதும் பிளக்ஸ் பேனா் வைக்கப்பட்டுள்ளது. இதே தொழிற்சங்கங்கள் கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளா் தின ஊா்வலத்தின்போது பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் முக்கியத் தலைவா்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் வாகனங்களில் பிளக்ஸ் பேனா் கட்டிச் சென்றனா்.
அரசின் கொள்கைகள் மற்றும் சட்டங்களை விமா்சிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால், தலைவா்களைக் கொச்சைப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை.
இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே எதிா்ப்பினைப் பதிவு செய்துள்ளோம். எனவே, இந்த ஆண்டும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் பாா்த்துக்கொள்ள வேண்டியது காவல் துறையின் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது, பாஜக மாவட்ட துணைத் தலைவா் சி.பி.சுப்பிரமணியம், மாவட்டப் பொருளாளா் நடராஜ், மாவட்டச் செயலாளா்கள் அருண், காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.