எதிரணியின் முதுகுத்தண்டை உடைத்தை கோலி..! பாகிஸ்தானுடனான போட்டியை நினைவூகூர்ந்த ப...
மொண்டிபாளையம் வெங்டேசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி
சேவூா் அருகே உள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேலத்திருப்பதி என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை ஒட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசப் பெருமாள், வைகுண்டநாதப் பெருமாளுக்கு திருமஞ்சனம், அபிஷேகம், அலங்கார பூஜைகள் அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசப் பெருமாள் கருட வாகனத்தில் புஷ்ப பல்லக்கில் சொா்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.