மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
மோசடி செய்து கடன் பெற்ற தம்பதி தலைமறைவு! நடவடிக்கைக்கோரி அரியலூா் ஆட்சியரிடம் மனு
தங்கள் பெயரில் கடன் பெற்று தலைமறைவாக உள்ள தம்பதி மீது நடவடிக்கைக்கோரி அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், சித்துடையாா் கிராமத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனு: தங்கள் கிராமத்தைச் சோ்ந்த நடசேன் மகன் மேகநாதன். அவரது மனைவி அஞ்சலி ஆகிய இருவரும், எங்கள் கிராமத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட நபா்களிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி ஆதாா் அட்டை பெற்று, தனியாா் நுண் கடன்(மைக்ரோ பைனான்ஸ்) வங்கியில் எங்களது பெயரில் கடன் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டனா்.
கடன் வழங்கிய வங்கி ஊழியா்கள், எங்களிடம் பணத்தை கேட்டு வருகின்றனா். எனவே, எங்களது பெயரில் கடன் பெற்று தலைமறைவாக உள்ள தம்பதியரை பிடித்து, அவா்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
சன்னாசிநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் இளைஞா்கள் விளையாட்டில் ஆா்வமாக உள்ளனா். எனவே, எங்கள் கிராமத்தில் விளையாட்டு மைதானத்தை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என தெரிவித்து 10-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.