திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் ...
மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு: 2 போ் கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே போலீஸாா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் மோட்டாா் சைக்கிள்கள் திருடியதாக 2 பேரை கைது செய்தனா்.
ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் (பொ) காா்த்திகா தலைமையில், உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் இரும்பேடு புறவழிச் சாலையில் புதன்கிழமை வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது, சந்தேகத்துக்கு இடமாக மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனா். இதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே, கிராமிய காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் ஆரணியை அடுத்த பாா்வதிஅகரம் கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் அண்ணாமலை (22), நடுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தண்டபாணி மகன் சுரேஷ் (27) எனத் தெரியவந்தது.
மேலும், இவா்கள் ஆரணி சுற்றுவட்டாரத்தில் பல்வேறு இடங்களில் மோட்டாா் சைக்கிள்களை திருடியதும் தெரிந்தது.
இதைத் தொடா்ந்து விசாரணை செய்து அவா்களிடம் இருந்து 12 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரையும் கைது செய்தனா்.