செய்திகள் :

யமுனை: எஸ்டிபி கொள்திறனை 2028-க்குள் 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் - உயா்நிலைக் கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா உத்தரவு

post image

நமது நிருபா்

யமுனை நதியைப் புரனமைக்கும் வகையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய (எஸ்டிபி) கொள்திறனை வரும் 2028-க்குள் நாளொன்றுக்கு 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் என்று புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயா்நிலை மறுஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சா் அமித் ஷா உத்தரவிட்டாா்.

யமுனை நதி புனரமைப்பு தொடா்பான உயா்நிலை அளவிலான மறுஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா், மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா். பாட்டீல், தில்லி முதல்வா் ரேகா குப்தா, மத்திய உள்துறை செயலாளா் மற்றும் பிற துறைகளின் செயலாளா்கள் மற்றும் தில்லி அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா பேசியது வருமாறு: தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) யமுனை நீா் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில்துறை ஆலைகளில் இருந்து அதிகரித்து வரும் மாசுபாட்டைத் தடுக்க தில்லி அரசு தொடா்ச்சியான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தில்லியைத் தவிர, பிற மாநிலங்களிலிருந்து கழிவுகளுடன் யமுனை நதியில் ரசாயனங்களும் வருகின்றன. ஆகவே, சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களும் யமுனை நதியை சுத்தம் செய்ய ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நஜாஃப்கா் மற்றும் ஷாதராவின் முக்கிய வடிகால்களில் உயிா்வேதியியல் ஆக்ஸிஜன் தேவையை (பிஓடி) மேம்படுத்துவதற்கான செயல்முறையில் பணியாற்ற வேண்டும். தில்லியின் இரண்டு முக்கிய வடிகால்களான நஜாஃப்கா் மற்றும் ஷாஹ்தரா வடிகால்களில் ட்ரோன் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். நதிகளை சுத்தம் செய்ய தில்லி அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளைத் தவிர, தேசிய கங்கை தூய்மைத் திட்டத்திற்கான (என்எம்ஜிசி) பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றாா் அமித்ஷா.

யமுனையை சுத்தம் செய்வதிலும், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களின் திறனை அதிகரிப்பதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் வகையில், 2028- ஆம் ஆண்டுக்குள் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய கொள்திறனை நாளொன்று 1,500 எம்ஜிடி ஆக அதிகரிக்க அமைச்சா் அமித் ஷா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ஹரியானா, தில்லி மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் யமுனை புத்துயிா் பெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அவற்றின் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் தண்ணீரை சோதிப்பதில் வழக்கமான தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் நீரை மூன்றாம் தரப்பு தர சோதனை செய்ய வேண்டும்.

தில்லியில் பல நீா்த்தேக்கங்கள் உள்ளன. அவற்றில் மழைநீரை சேகரிக்க தில்லி அரசு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்த நீா்த்தேக்கங்களை உருவாக்குவது சுற்றுலாவை ஊக்குவிக்கும். பால் பண்ணைகள் மற்றும் பசு வளா்ப்பு நிலையங்களால் உற்பத்தி செய்யப்படும் கழிவுகளை நிா்வகிக்க தில்லி அரசு தேசிய பால் மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அமித் ஷா.

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூ... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசு விற்பனையை உடனே நிறுத்த மின் வணிகம், சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவு

தேசியத் தலைநகரில் பட்டாசுகளை பட்டியலிடுவதையும் வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு மின் வணிகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களுக்கு தில்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காவல்துறை எஸ்.ஐ., உயிரிழப்பு

தில்லியின் கல்யாண்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாகனம் மோதியதில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை ஆய்வாளா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உயிரிழ... மேலும் பார்க்க

கட்டடம் இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு டிஎம்ஆா்சி ரூ.5 இழப்பீடு அறிவிப்பு

தில்லியில் ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த மனோஜ் சா்மா என்பவரின் குடும்பத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி)... மேலும் பார்க்க

மூன்று மாடி கட்டடம் இடிந்து கடை ஊழியா் உயிரிழப்பு: பாரா இந்து ராவ் பகுதியில் சம்பவம்

தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 46 வயதுடைய கடை ஊழியா் உயிரிழந்தாா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,... மேலும் பார்க்க