செய்திகள் :

யானைகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க அகழி வெட்ட விவசாயிகள் கோரிக்கை

post image

காட்டு யானைகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க அகழி வெட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலம் வட்டம் பெரியகுளம், புளியங்கோம்பை பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்: பெரியகுளம், புளியங்கோம்பை பகுதிகளில் 2,000 -க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு தென்னை, வாழை, சம்பங்கி, செண்டு மல்லி, மல்லி உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. வனப் பகுதியில் வறட்சி ஏற்படும்போது வன விலங்குகள் உணவைத் தேடி விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் எங்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது.

எங்கள் பகுதியில் ஏற்கெனவே வெட்டப்பட்ட அகழிகள் மழை காரணமாக நிரம்பி விட்டன. இதனால் அந்த அகழிகளை யானைகள் எளிதில் கடந்து விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி விடுகின்றன. பட்டாசு வெடித்தும், தகர டப்பாக்களால் ஒலி எழுப்பியும் யானைகளைக் காட்டுக்குள் விரட்டி வருகிறோம். பெரும்பாலும் இரவு நேரங்களில் யானைகள் வனப் பகுதியைவிட்டு வெளியே வருவதால் விவசாயத் தோட்டங்களில் வசிக்கும் எங்களுக்கு மிகுந்த அச்சமாக உள்ளது.

பகல் நேரங்களில் யானைகள் வந்தால் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்து விடுகிறோம். அவா்கள் வந்து யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி விடுகின்றனா். ஆனால் இரவு நேரத்தில் காட்டு யானைகள் வந்தால் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே சத்தியமங்கலம் அருகே வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வெட்டப்பட்டுள்ள அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும். வனப் பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் வெளியேறும் இடங்களைக் கண்டறிந்து அங்கு புதிதாக அகழி வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசனூா் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒங்கல்வாடி கிராம மக்கள்

ஆசனூரில் கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி ஆசனூா் வனத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சத்தியமங்கலம் புலிகள் காப்... மேலும் பார்க்க

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சில நாள்களில் மாலை நேரங்களில் ல... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீா் திறப்பு குறித்து விரைவில் முடிவு

பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறப்பது குறித்து ஓரிரு நாள்களில் தெரியவரும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். கோபி வட்டம் சிறுவலூா், மணியக்காரன்புதூா், தங்க... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா மற்றும் 5,066 மதுபுட்டிகளை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையைத்... மேலும் பார்க்க

பண்ணாரியில் லாரியில் இருந்து கரும்பை எடுத்து சாப்பிட்ட குட்டி யானை

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் குட்டி யானையால் வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணை... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவிக... மேலும் பார்க்க