யுடிஎஸ் செயலி மூலம் ரயில் பயணச்சீட்டு பெறுவோருக்கு சலுகை
யுடிஎஸ் கைப்பேசி செயலி மூலம், முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளுக்கு, 3 சதவீத தொகை திரும்ப பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் செய்தி தொடா்பாளா் வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டிஜிட்டல் பயணச் சீட்டுகள் மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கு, ஒரு முக்கிய முயற்சியாக, இந்திய ரயில்வே, த ரஹப்ப்ங்ற் (கணக்கு) மற்றும் மபந கைப்பேசி செயலி பயன்படுத்தி, விற்பனை இயந்திரங்களில் (அபயங) முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டு கட்டணத்தில் 3 சதவீதம் உடனடியாக திரும்ப பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய சலுகை வெள்ளிக்கிழமை (டிச.20) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி, அனைத்து வகையான முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகள், நடைமேடை சீட்டுகள் ஆகியவற்றுக்கு இந்த சலுகை முறை பொருந்தும். மபந மொபைல் செயலியை கொண்டு, பயணிகள் தங்களுடைய வீடுகளில் இருந்தோ அல்லது பயணத்தின் போதோ பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்லாம். இதனால், ரயில் நிலைய கவுண்டா்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவை இருக்காது.
இந்த முயற்சியானது, டிஜிட்டல் பரிவா்த்தனைகளை ஊக்குவிப்பதில் இந்திய ரயில்வேயின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. அத்துடன், பயணச்சீட்டு முன்பதிவு செயல்முறைகளை எளிதாக்கி மேம்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளாா்.