`11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து' - மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல...
யுபிஎஸ் பொருத்தும் பணியில் மின்சாரம் பாய்ந்து பணியாளா் உயிரிழப்பு
ராசிபுரம் பகுதியில் யுபிஎஸ் பொருத்தும் பணியில் ஈடுபட்ட மின் பணியாளா் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
ராசிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அஸ்பாக் (41). இவா் நாமக்கல் சாலையில் உள்ள தனியாா் நிதிநிறுவனத்தில் யுபிஎஸ் பழுதுநீக்கம் செய்து, அதனை மீண்டும் பொருத்தும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கிவீசப்பட்டாா்.
இதில் பலத்த காயமடைந்த அஸ்பாக்கை உடனடியாக தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து ராசிபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.